Request callback
Leave your number here
சம்பத் வங்கி குழுமத்தின் இணைநிறுவனமான சியபத பினான்ஸ் பீஎல்சி முன்னதாக வரை சம்பத் லீசிங் & பக்டரிங் லிமிட்டட் எனவே அறியப்பட்டதோடு, 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. சியபத பினான்ஸ், சிறிய மற்றும் நடுத்தரளவிலான நிறுவனங்களுக்கே விசேடத்துவமான இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிபந்தனைகளுக்கமைய உரிமம் பெற்றதோர் நிதி நிறுவனமாகும். கடந்த 12 வருடகால பயணத்தில் சியபத பினான்ஸ், சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரியதோர் இணைநிறுவனமாக காணப்படுவதோடு, 2013 செப்டம்பர் மாதம் தற்போது பயன்படுத்தப்படும் சியபத பினான்ஸ் நாமத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தின் நிதி நிறுவன உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதி வர்த்தக சட்டத்தின் கீழ் மீள்ஸ்தாபிக்கப்பட்டதோர் நிறுவனமாகும்.
நிறுவனத்தின் நிதி தீர்வு சேவைகளாக நிதி குத்தகை, வாடகை கொள்முதல் நிதியளித்தல், தங்க அடகுச் சேவை, பக்டரிங் செயல்பாடுகள் மற்றும் வைப்புத் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது.