அதி உயர்ந்த முன்னுரிமைச் செயற்பாடாக எமது வாடிக்கையாளருக்கு சிறந்தவற்றையே அளிக்கும் எமது நிறுவனத்தின் கொள்கைகளைப் பின்பற்றி, சியபத பினான்ஸ் கம்பனியானது பினான்ஸ் உங்களது முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பாரியளவான லீசிங் வசதிகள் பலவற்றை உங்களுக்கு வழங்குகின்றது. நாடு முழுவதும் அமைந்துள்ள எமது கிளைகள் வழியாக எமது இந்த லீசிங் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் அது தனிப்பட்ட, தொழில்சார், வியாபாரிகள், அல்லது நிறுவன கம்பனிகளுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குகிறது.
நீங்கள் உங்களது கனவு வாகனத்தை செலுத்த தயாராக இருக்கிறீர்களா? உங்களது வருமானத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப தயாரிக்கப்பட்ட நெகிழ்ச்சிமிக்க நிதித் தீர்வின் பொருட்டு உதவுவதற்கு சியபத லைப்ஸ்டைல் லீசிங் தயாராக உள்ளது.
சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், நாளாந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்களுக்காகவும் தயார் செய்யப்பட்டுள்ள துரித லீசிங் திட்டமாகும். சிறந்த குத்தகைக் கட்டணம், தொல்லைகள் அற்ற மற்றும் சிநேகபூர்வமான சேவையுடன் கூடிய ‘சியபத படி டிரக்’ லீசிங் தீர்வானது உங்களது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு உங்களுக்கு பாரியளவில் கைகொடுக்கும்.
விவசாயிகள், தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், மற்றும் ஏனைய பணப்பயிர் உற்பத்திகளான இறப்பர், மற்றும் வாசனைத் திரவியங்கள், போன்ற பல பயிர்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தருகின்ற ‘அக்ரி லீஸ் குத்தகை’ திட்டம் ஊடாக நான்கு சக்கர டிராக்டர் மற்றும் அறுவடை செய்யும் இயந்திரம் போன்ற விவசாயத் துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய சொத்துக்களுக்காக நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நிலையான அடிப்படையில் குத்தகைத் தொகையை செலுத்துதல் அல்லது அறுவடை செய்யும் போகங்களுக்கு அமைய கொடுப்பனவுகளை செய்தல் ஆகிய முறைகள் இடையே உங்களுக்குப் பொருத்தமான கொடுப்பனவு திட்டங்களைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.
வியாபார அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒரு முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்ய நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ‘சியபத டுக் டுக் லீசிங்’ ஊடாக சில மணித்தியாலங்களுக்குள் புதியமுச்சக்கர வண்டியொன்றை அல்லது பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியொன்றை உங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போதுள்ள ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது புதிய வாடிக்கையாளருக்கு அவர்களிடம் உள்ள ஒரு வாகனத்திற்காக வழங்கப்படுகின்ற மீள்நிதியளிக்கும் கடன் திட்டமான ‘உடனடி காஷ்’ முறை, தங்குமிட வசதிகளை வழங்குதல் போன்ற பல நன்மைகளை இது வழங்குகிறது. வீட்டை புதுப்பித்துக் கொள்வதற்கும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்காகவும், கல்வி மற்றும் செயற்பாட்டு மூலதன தேவைப்பாடுகள் அல்லது பிற அவசரத் தேவைகளுக்காகவும் இந்த கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சியபத மொபைக் லீசிங்’குடன் தற்போது உங்களுக்கு சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிளைப் பெற்றுக் கொள்ள முடியும். எமது சிறப்பான குத்தகை தவனைக் கட்டணம், இலகு ஆவண நடைமுறைகள், தொழில்சார் சேவைகளுடன் குத்தகை வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு எமது எந்தவொரு கிளைக்கும் செல்லுங்கள்.