நாடு முழுவதிற்குமான தனது சேவையை விரிவுபடுத்தும் முகமாக சியபத பினான்ஸ் பிஎல்சி தனது 51வது கிளையை மத்துகமவில் அண்மையில் திறந்துவைத்துள்ளது. களுத்துறை மாவட்டத்திற்குள் உள்ள முதன்மை நகரங்களில் ஒன்றான மத்துகமவில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையானது சியபத வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குகிறது.
அரசு மற்றும் தனியார் துறையின் ஈடுபாட்டை ஒருங்கிணைக்கும் கலப்புப் பொருளாதாரத்தைக் கொண்ட மத்துகம, அதன் வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. இறப்பர், நெல், தென்னை மற்றும் தேயிலை போன்ற பெருந்தோட்டத் துறைகள் மூலம் மக்கள் தமது பொருளாதாரத்தை சார்ந்துள்ளனர். மேலும் இப்பகுதி மக்கள், சேவைகள் மற்றும் விவசாயத் தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பிரபலத்தையும் காட்டுகின்றனர்.
மத்துகமவின் செழிப்பான பொருளாதாரத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பது சுற்றுலாத்துறை ஆகும். இங்கு பழங்கால மத வழிபாட்டுத் தலங்களான பஹியங்கல (ஃபா ஹியன் குகை), பக்குல மகா சேயா, சிங்கராஜா மழைக்காடுகளின் மயக்கும் அழகு மற்றும் பல இயற்கை நீர்வீழ்ச்சிகள் என்பன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக அமைந்துள்ளதோடு, விருந்தோம்பல் துறையில் ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கும் வழியமைத்துள்ளது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ரஜீவ் டி சில்வா, சிரேஷ்ட முகாமைத்துத்தினர் மற்றும் மத்துகம பிரதேச செயலாளர திரு.மதுச சங்கல்ப, நகர சபை செயலாளர் திருமதி. நெலு நிசாந்தி இடகொட, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ருவன் இந்திக, தொழிற்சங்கத் தலைவர் திரு.சூல ஜயநெத்தி, மற்றும் அரசு, தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் கிளை திறந்து வைக்கப்பட்டது.
கிளை திறப்பு விழாவில் பேசிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன 'நாம் வாழும் வேகமான யுகத்தில், குறிப்பாக நிதிச் சேவைத் துறையானது வணிகத் துறையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மத்துகம வளர்ச்சிக்கான பெரும் திறனை வெளிப்படுத்துகிறது, எனவே சியபத பினான்ஸ் வழங்கும் முழுமையான சேவை, இந்த சமூகத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எங்கள் தடத்தை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்று குறிப்பிட்டார்:
நிறுவனம் குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அதன் தானியங்கு பில் செலுத்தும் வசதியான Smart Pay வரையிலான பரந்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
நிலையான நிதியுதவியை மையமாகக் கொண்ட அதன் தற்போதைய 'சியபதென் மிஹிகதட' CSR திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஷ்ட முகாமைத்துவமும் இணைந்து அகலவத்தையில் மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர். மேலும், நிறுவனம் மத்துகமவில் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் அகலவத்தை யட்டியான கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கணினிகள் மற்றும் உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியது.
சம்பத் வங்கிக் குழுமத்தின் மிகப் பெரிய துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 ஆண்டுகளில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில் நிறுவனம் பங்களித்துள்ளது.
புதிய கிளையுடன் தொடர்பு கொள்ள, 034-7605625 ஐ அழைக்கவும் அல்லது இல.41, களுத்துறை வீதி, மத்துகமவில் உள்ள வளாகத்திற்கு விஜயம் செய்யவும். சியபத பினான்ஸ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும். ..
 

