எமது பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்

நிலைபேறானதன்மை

இலங்கையின் முன்னணி நிலைபேறான நிதி கம்பனியாகத் திகழ்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். எமது மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், ஒற்றுமையாக வாழும் மக்களினத்தை உருவாக்குவதற்கும், நாம் தற்போது காணும் உலகத்தை விட மிகச் சிறந்ததொரு உலகத்தை விட்டுச் செல்வதற்கும் வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

Understanding Our Context

- நாம் கடந்து செல்கின்ற சூழலை புரிந்து கொள்ளுதல்-

விசேடமாக, இலங்கை போன்ற நாடுகளில் பூகோளமயமாதல் காரணமாக பொருளாதார, சமூக மற்றும் சூழல் ரீதியான தாக்கங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய வாய்ப்பைக் கொண்டிருந்தாலும், வளரும் நாடுகள் இந்த துறைகளில் பல தடைகளை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன. ஒரு பொறுப்பு வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனமாக, சியபத பினான்ஸ் கம்பனியானது, இந்நாட்டில் வாழும் சேவைகளைப் பெறமுடியாத மக்களுக்கு, அவர்களது முயற்சியாண்மை மற்றும் நிதிசார் இயலளவை மேம்படுத்துவதன் மூலமாக, நாட்டின் அபிவிருத்தியை நோக்கி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க, முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக மூலோபாய ரீதியாக இந்த சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

Ethical Conduct, Good Governance & Compliance

-Ethical Conduct, Good Governance & Compliance-

சியபத பினான்ஸ் கம்பனியில் ஆபத்துக்கள் மற்றும் இணக்கம் என்பவை தொடர்பான செயற்பாடுகளுக்காக பிறிதாக ஒரு துறை காணப்படுகின்றது. கம்பனியானது, அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற நிறுவன ரீதியான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தொழிலின் உயர்தர அணுகுமுறைகளை பின்பற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது. வியாபாரத்தின் நீண்ட கால நிலைபேறானதன்மையை பேணிச்செல்லும் பொருட்டும் சியபத பினான்ஸ் கம்பனியானது தனது நெறிமுறை நடத்தைகளது பயன்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதுடன் அதன் ஊடாக தனது நெகிழ்ச்சியான வியாபார செயற்பாடுகளில் சிறந்த பண்புகளையும் வெளிக்காட்டுகின்றது.

Financial Inclusivity

-நிதிசார் உள்ளடக்கம்-

சியபத பினான்ஸ் கம்பனியானது தனது தொலைநோக்கு சிந்தனை ஊடாக செயற்பட்டு நெகிழ்ச்சிமிக்கதும், ஆக்கத்திறன்மிக்கதுமான நிதித் தீர்வுகளை முன்வைத்து, இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு தனது சேவைகளை வழங்குவதுடன், அதன் ஊடாக தமது சேவைபெறுனர்களுக்கு நிலைபேறானதன்மையையும், பெறுமதியையும் உறுதிப்படுத்திக் கொடுக்கின்றது. இலக்கு பிரிவினருக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலமும், சிறந்த வாழ்வாதாரத்தை நோக்கி அவர்களை கொண்டு செல்வதன் மூலமும், சியபத பினான்ஸ் கம்பனியானது அவர்களது முக்கிய பலத்தை தன்பால் ஈர்த்துக் கொள்கின்றது. இது வணிகச் சந்தையில் தனது சேவைபெறுனர்களின் மதிப்பைத் தொடர்ச்சியாக பேணிச் செல்ல நிறுவனத்திற்கு உறுதுணையாக உள்ளது.

Stakeholder Engagement

- பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுதல்-

பொருளாதரத்தை வலுப்படுத்தும் நாம், எமது பிரதான பங்குதாரர்களுடன் அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவர்களது குறித்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டும் சிறந்த நிதித் தீர்வுகளை வழங்குவதன் ஊடாக தொடர்ச்சியாக அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். எமது உத்தியோகத்தர்கள், கொடுக்கல் வாங்கல் செய்வோர், பங்குடமையாளர்கள், நெறிப்படுத்தும் அதிகாரிகள், வியாபார பங்குதாரர்களைப் போலவே உள்நாட்டு மக்கள் உள்ளிட்ட பிரதான தரப்பினரிடையே, அவர்களது வாழ்வாதார செயற்பாடுகளினிடையே ஒரு பெறுமதி ஏற்படக்கூடிய வகையில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற கலந்துரையாடல்கள் மட்டில் நாம் நம்பிக்கை வைத்து செயற்படுகின்றோம்.