16 வருடத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் நிபுணத்துவத்தையும், 40 பில்லியன்களுக்கும் மேற்பட்ட சொத்து அடிப்படையையும், தொலைநோக்கு சிந்தனைமிக்க தலைமைத்துவத்தையும் கொண்ட சியபத ஃபினான்ஸ் நிறுவனமானது, எவரேனும் ஒரு தரப்பினர் மீது நம்பிக்கை வைத்து செயற்படக்கூடிய, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய, இலங்கைக்குள் அமைந்துள்ள நம்பகமான நிதி மற்றும் லீசிங் கம்பனியாகும். இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அனுமதிப்பத்திரத்தைக் கொண்டதும், அதன் ஊடாக மேற்பார்வை செய்யப்படுவதுமான சியபத ஃபினான்ஸ் நிறுவனமானது, முதலீட்டாளர்களுக்கு உற்பத்தித்திறன்மிக்க பயன்களைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களுடன் நிலைபேறான தொடர்புகளையும் பேணிச் செல்கிறது. உண்மையிலேயே நாம் உங்களது நம்பிக்கையும் நாணயமும் மிக்க நிதி பங்குதாரர்களாவோம்!