சியபாதா ஃபைனான்ஸில் சி.எஸ்.ஆர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் எதிர்கால தலைமுறையினருக்கான வளங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் எங்கள் வணிக செயல்பாடுகளை கவனத்துடன் நடத்துவதன் மூலம் அதை எங்கள் அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைக்கிறோம். சியபாதா நிதி தனிநபர்கள், குடும்பங்கள், வணிகங்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதன் சிறந்த திறனில் அதிக நன்மைகளைச் செய்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம்
நுவரெலியா நகர பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சியபத பினான்ஸ் பி.எல்.சி சாலை பாதுகாப்புப் பலகைகளை நுவரெலியா காவல் நிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகள் சியபத பினான்ஸ் பி.எல்.சி இன் கிளை முகாமையாளர் திரு. ரெங்கன் பாலகிருஷ்ணன் அவர்களால் நுவரெலியா தலைமை காவல் மேலதிகாரி (SSP) திரு. உடுகம்சூரிய அவர்களிடம் சியபத பினான்ஸ் குழுவினர் மற்றும் நுவரெலியா காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது .
ரத்னபுர நகர பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சியபத பினான்ஸ் பி.எல்.சி சாலை பாதுகாப்பு பலகைகளை ரத்னபுர நகர காவல் நிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகளை சியபத பினான்ஸ் பி.எல். சி இன் தலைமை பிராந்திய முகவர் திரு. பண்டார மெடகொட அவர்களால் ரத்னபுர நகர காவல் HQI திரு. கயான் புத்திக்க அவர்கள் மற்றும் ரத்னபுர நகர காவல் OIC திரு. தில்ருக் சஞ்சீவ அவர்கள் ஆகியோரிடம் சியபத பினான்ஸ் குழுவினர் முன்நிலையில் வழங்கப்பட்டது.
கட்டுகஸ்தொட்ட நகர பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சியபத பினான்ஸ் பி.எல்.சி சாலை பாதுகாப்பு பலகைகளை கட்டுகஸ்தொட்ட நகர காவல் நிலைநிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகளை சியபத பினான்ஸ் பி.எல். சி இன் பிராந்திய முகவர் திரு. ரசிக ரத்நாயக அவர்களால் கட்டுகஸ்தொட்ட காவல் பொருப்பு அதிகாரி திரு. A.W.P ரசிக சம்பத் அவர்களிடம் சியபத பினான்ஸ் குழுவினர் முன்நிலையில் வழங்கப்பட்டது.
அனுராதபுர நகர பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சியபத பினான்ஸ் பி.எல்.சி சாலை பாதுகாப்பு பலகைகளை அனுராதபுர நகர காவல் நிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகளை சியபத பினான்ஸ் பி.எல். சி இன் தலைமை பிராந்திய முகவர் திரு. மஞ்சுள ஜயதிலக அவர்களால் அனுராதபுர போக்குவரத்து பொருப்பு காவல் அதிகாரி திரு. சேனக அவர்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை காவல் ஆய்வாளர் திரு. நிஷங்க அவர்கள் ஆகியோரிடம் சியபத பினான்ஸ் குழுவினர் முன்நிலையில் வழங்கப்பட்டது.
"ஓர் சொற்ப உயிர் மூச்சு" இன் பதினொன்றாவது CSR வரிசையில்., சியபத பினான்ஸ் இன் மாவட்ட தலைவர் திரு முகமது பிரிம்சாத் சாய்ந்தமருது பிரிவு மருத்துவமனையின் DMO Dr. M.H.K ஜானுஸ் மற்றும் சியபத பினான்ஸ் மற்றும் மருத்துவமனை குழுவினர் ஆகியோரின் பங்கேற்புடன் ICU கட்டில் ஒன்றினை சாய்ந்தமருது பிரிவு மருத்துவமனைக்கு அன்மையில் வழங்கப்பட்டது.
கிரிபத்கொடை நகர பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக பொது விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சியபத பினான்ஸ் பி.எல்.சி சாலை பாதுகாப்புப் பலகைகளை கிரிபத்கொடை நகர காவல் நிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகளை சியபத பினான்ஸ் பி.எல்.சி இன் லீசிங் மற்றும் கடன் பிரிவின் தலைவர் திரு. ஹிஷாம் ஜியார்த் அவர்களால் கிரிபத்கொடை நிர்வாக காவல் பொருப்பு அதிகாரி திரு. C.I பத்திரன அவர்களிடம் சியபத பினான்ஸ் குழுவினர் முன்னிலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
"ஓர் சொற்ப உயிர் மூச்சு " இன் பத்தாவது சமூக பொறுப்பு தொடரில் சியபத பினான்ஸ் இன் லீசிங் மற்றும் கடன் பிரிவின் தலைவர் திரு. ஹிஷாம் ஜியார்த் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவத் தலைவர் திரு. இந்திரக லியனகே, அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையின் Dr. எசந்த எல்லாவலை மற்றும் சியபத பினான்ஸ் மற்றும் மருத்துவமனை குழுவினர் ஆகியோரின் பங்கேற்புடன், அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனைக்கு ICU கட்டில் ஒன்று அன்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டது
மாத்தளை நகரத்தின் பாதுகாப்பு மற்றும் விபத்தற்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு மற்றும் பொருப்பான சாலை பயன்பாட்டு வழக்கத்தை உருவாக்க சீயபத பினான்ஸ பி.எல்.சி சாலை பாதுகாப்பு பலகைகளை மாத்தளை நகர காவல் நிலையத்திற்கு வழங்கியது. இப்பாதுகாப்பு பலகைகளை சியபத பினான்ஸ் இன் பி.எல்.சி இன் லீசிங் மற்றும் லோன்ஸ் பிரிவின் தலைவர் திரு. ஹிஷாம் ஜியார்த் அவர்களால், மாத்தளை போக்குவரத்து காவல் அதிகாரி திரு. மஞ்சுல அபேகூன் அவர்களிடம் சியபத பினான்ஸ் குழுவினர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
சொற்ப உயிர் மூச்சு இன் ஒன்பதாவது கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினானஸ் இன் நிர்வாக இயக்குனர் திரு. ஆனந்த செனிவிரத்ன வெலிகம பிரிவு மருத்துவமனை இன் DMO Dr. பிரதீப் ,மற்றும் சியபத பினான்ஸ் மற்றும் மருத்துவமனை குழுவினர் பங்கேற்புடன் வெலிகம பிரிவு மருத்துவமனைக்கு ICU கட்டில் ஒன்று வழங்கப்பட்டது.
"சொற்ப உயிர் மூச்சு" இன் எட்டாவது கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் இன் தலைமை இயக்குநர் திரு. ரஜீவ் டி சில்வா, தலைமை மனிதவளத்துறை அதிகாரி திரு. பிரசாத் உடுகம்பளை, ஹோமாகமை தள மருத்துவமனை இயக்குனர் Dr. ஜனித் ஹெட்டியாராச்சி, மற்றும் சியபத பினான்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவமனை குழுவினரின் பங்கேற்புடன் ஹோமாகமை இராணுவதள மருத்துவமனைக்கு இரண்டு செயற்கருவி தள்ளு வண்டிகள் அன்மையில் வழங்கப்பட்டன.
சியபத பினான்ஸ் ICU கட்டில் ஒன்றினை கட்டுகஹாஹேனை கிராமப்புற மருத்துவமனைக்கு அண்மையில் வழங்கியது. "சொற்ப உயிர் மூச்சு " இன் ஏழாம் கட்ட சீ.எஸ். ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் தலைமை வர்த்தக அதிகாரி திரு. மதிஷ ஹேவாவிதாரன, கட்டுகஹாஹேனை கிராமப்புற மருத்துவமனை பொறுப்பு மருத்துவர் Dr. ரஞ்சித் திஸ்ஸாநாயக மற்றும் சியபத பினான்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவமனை குழுவினரின் முன்னிலையில் இக் கட்டில் வழங்கப்பட்டது .
"சொற்ப உயிர் மூச்சு" இன் ஆறாம் கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் இன் லீசிங் மற்றும் லோன்ஸ் பிரிவின் தலைவர் திரு. ஹிஷாம் ஜியார்த் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குநர் Dr. ராகுலன் சியபத பினான்ஸ் வவுனியா கிளை மற்றும் மருத்துவமனை குழுவினரின் பங்கோற்புடன் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு செயற்பாட்டு கட்டில்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
"சொற்ப உயிர் மூச்சு" இன் ஐந்தாவது கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் இன் மீள்ளெடுப்புப் பிரிவின்தலைவர் திரு. திலக் அதிகாரி, அனுராதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் Dr.அமல் விஜெரத்ன,சியபத பினான்ஸ் கிளை மற்றும் மருத்துவமனை குழுவினரின் பங்கேற்புடன் அனுராதபுர மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ICU கட்டில் ஒன்று அன்மையில் வழங்கப்பட்டது
"சொற்ப உயிர் மூச்சு" இன் நான்காம் கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் மீள்ளெடுப்புப் பிரிவின் தலைவர் திரு திலக் அதிகாரி அத்தரகல்லை, கல்கமுவ மருத்துவமனையின் Dr. சமீர பண்டார சியபத பினான்ஸ் கிளை மற்றும் மருத்துவமனை குழுவினர் ஆகியோரின் பங்கேற்புடன் அத்தரகல்லை, கல்கமுவ பிரிவு மருத்துவமனைக்கு ICU கட்டில் ஒன்று அன்மையில் வழங்கப்பட்டது.
"சொற்ப உயிர் மூச்சு" இன் மூன்றாவது கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் இன் மனிதவள மேலாளர் திரு. பிரசாத் உடுகம்பளை கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனை இயக்குநர் னுச. சமான் பத்திரன மற்றும் கம்பஹா கிளை மற்றும் மருத்துவமனை குழுவின் பங்கேற்புடன் கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனைக்கு ஐஊரு கட்டில் வழங்கப்பட்டது.
"சொற்ப உயிர் மூச்சு" இன் இரண்டாவது கட்ட சீ.எஸ்.ஆர் வரிசையில் சியபத பினான்ஸ் தலைமை விநியோக மேலாளர் திரு. மதிஷ ஹேவாவிதாரன னுச. சமிந்த தர்மதாஸ மற்றும் சியபத பினான்ஸ் மாத்தளை கிளை மற்றும் மருத்துவமனை குழுவினர் ஆகியோரின் பங்கேற்புடன் மாத்தளை பொது மருத்துவமனைக்கு பெட் பல்ஸ் ஒக்ஸி மீட்டர் ஒன்று வழங்கப்பட்டது.
சியபத பினான்ஸ் இன் "சொற்ப உயிர் மூச்சு " என்பது கொவிட்-19 பெருந்தொற்றின் போது எமது சமூகத்தினருக்கு ஆதரவு தரும் வகையில் நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக சி.எஸ்.ஆர் துவக்க முயற்சியாகும். "சொற்ப உயிர் மூச்ச " திட்டத்தின் முதல் கட்டமாக சியபத பினான்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. ஆனந்த செனிவிரத்ன கேகாலை மாவட்ட பொது மருத்துவமனை இயக்குநர் னுச.மிஹிரி பிரியாங்கனி மற்றும் கேகாலை கிளை மற்றும் மருத்துவமனை குழுவினரின் பங்கேற்புடன் கேகாலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு ஐஊரு கட்டில் மற்றும் ஒக்சிஜன் ரெகுலேட்டர் வழங்கப்பட்டது. மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செயவதற்கான ஆதரவை தந்து உதவிய சியபத பினான்ஸின் ஊழியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
விசேடமாக சவாலான இக்காலகட்டத்தில் இலங்கை காவல்துறை அனைத்து சமூகங்களையும் பாதுகாப்பதற்காக வழங்கும் விதிவிலக்கான அர்ப்பணிப்பை சியபத பினான்ஸ் பீ.எல்.சீ அங்கீகரித்து மதிப்பிடுவதற்கான இவ்வாய்ப்பை பயன்படுத்துகிறது. சாய்ந்தமருதில் அமைந்துள்ள சாலையோர காவல் நிலைகளுக்கு நிழறுகுடைகளை வழங்கி உதவ சியபத பினான்ஸ் முன்வந்துள்ளது. இந்நிழற் குடைகளை சியபத பினான்ஸ் பிராந்திய இணை முகவர் திரு முகமது பிரிம்சாத் மற்றும் சாய்ந்தமருது கிளை முகவர் திரு. முகமது பாரீ ஆகியோர் சாய்ந்தமருது காவல் நிலைய ழுஐஊ தலைமை ஆய்வாளர் திரு. சுலைமா சம்சுத்தீன் அவர்களிடம் சியபத குழுவினர் முன்நிலையில் வழங்கப்பட்டது.
சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி ஓர் வலுவான அடிப்படைத் தேவை என்பதை சியபத பினான்ஸ் அங்கீகரிக்கிறது. அம்பகந்தவில இல் அமைந்துள்ள, சுமார் 700 மாணவர்களை கற்பிக்கும் புனித ரோகஸ் பாடசாலைக்கு ஆதரவு அளிக்க சியபத பினான்ஸ் பெருமையுடன் முன்வந்துள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்த உதவும் இந்த உள்கட்டமைப்பு அபிவிருத்தி முயற்சியை சிலாபம் கிளை முகாமையாளர் திரு. மிலான் வர்ணகுலசூர்ய மற்றும் பாடசாலை முதல்வர் திரு. கெலும் பிரியதர்ஷன ஆகியோரால் செயல்படுத்தப்பட்டது.
இக்கட்டான காலங்களில் மனிதகுலத்தை மேம்படுத்தும் ஒன்றான முகற்சி! சியபத பினான்ஸ் இன் காலி கிளை 4 ஆவது ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் வகையில் கராபிடிய போதனா மருத்துவமனையின் புற்றுநோய் சங்கத்திற்கு மருத்துவ உபகரணங்களுக்கான அன்னதானம் மற்றும் நன்கொடைகளை ஏற்பாடு செய்வதில் பெரும் முயற்சியை எடுத்துள்ளது.
எங்கள் வருங்கால தலைமுறையினரின் கல்விக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்பதால், வெவல்டேனியாவில் உள்ள நியூபிரிட்ஜ் பாய்ஸ் இல்லத்திற்கு கணினிகள் மற்றும் பிற ஐடி உபகரணங்களை நன்கொடையாக வழங்க நாங்கள் முன்முயற்சி எடுத்தோம். எங்கள் நன்கொடைகள் மெய்நிகர் தளங்கள் மூலம் ஆன்லைன் கற்றலை எளிதாக்குகின்றன, குறிப்பாக கோவிட் -19 தொற்று சூழ்நிலையில்.
திஸ்ஸமஹராம மகா வித்யாலயா என்பது தரம் 1 முதல் 13 வரையிலான வகுப்புகளைக் கொண்ட ஒரு பள்ளியாகும். இந்த பள்ளியிலிருந்து சுமார் 1,500 மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். தொழில்நுட்பத்துடன் மாணவர்களின் முழு திறனை அடைய உதவும் நோக்கில் பள்ளிக்கு கணினி நன்கொடை வழங்க நாங்கள் பங்களித்தோம்.
6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைக் கொண்ட ஒரு பள்ளிதான் எராபடா வித்யாலயா. 62 மாணவர்கள் பள்ளியில் கல்வி பெறுகிறார்கள், 20 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த பள்ளிக்கு கணினி நன்கொடை வழங்க நிதி உதவி வழங்கினோம்.