சம்பத் பேங்க் பீஎல்சீ நிறுவனத்தின் முழுமையான உரிமயைக் கொண்டுள்ள, அதன் நிருவாகக் கம்பனியாக இருந்த சம்பத் லீசிங் அன்ட் பக்டரிங் லிமிட்ட் என முன்னர் பெயரிடப்பட்டிருந்த சியபத பினான்ஸ் பீஎல்சீ நிறுவனமானது, இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அதன் ஊடாக வழிநடத்தப்படுகின்ற விசேட லீசிங் கம்பனியாக செயற்படுவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்கள் என்ற துறைகளைச் சார்ந்த அடிமட்டத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், 2005 மார்ச் மாதத்தில் தாபிக்கப்பட்டது.
16 வருடங்களாக தமது செயற்பாட்டின் ஊடாக, சியபத பினான்ஸ் கம்பனி, சம்பத் வங்கிக்கு சொந்தமான பாரிய இணை நிறுவனமாக அபிவிருத்திடைந்து வந்துள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் 2011ஆம் ஆண்டு 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நிதிக் கம்பனி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், 2013 செப்டெம்பர் மாதத்தில் அந்த நிறுவனமானது அதன் தற்போதைய வர்த்தக நாமத்திற்கமைய மீள்பெயரிடப்பட்டது.
தரப்படுத்தல் (பிச்ரேடிங்ஸ் லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட): தேசிய நீண்ட கால தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட ‘ ஏ(எல் கே ஏ) இலக்கு – நிலையான தன்மையில் காணப்படுகின்றது.
மிகச்சிறந்த புத்தாக்கமிக்கதும் நம்பகத்தன்மையானதுமான முன்னணி
நிதிச்சேவைகளை வழங்குபவர்களாக திகழ்தல்
நிபுணத்துவம் வாய்ந்த குழு ஊடாக நிறுவனத்தின் நிருவாகத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்ச்சிமிக்கதும், ஆக்கபூர்வமானதுமான தீர்வுகளை வழங்குதல் மற்றும் எமது பங்குதாரர்களுக்கு அதிக பெறுமதியைப் பெற்றுக் கொடுத்தல்.