சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 60வது கிளையை பரபரப்பான வறக்காபொல நகரில் வெற்றிகரமாகத் திறந்துள்ளது, உள்;ர் சமூகத்திற்கு நம்பகமான நிதி தீர்வுகளுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் கிளை வலையமைப்பையும் வலுப்படுத்துகிறது.
புதிய கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்டவர்) திரு.
மதிஷ ஹேவாவிதாரண, மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர், வறக்காபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஞ்சீவ, கிராம சேவையாளர் திருமதி. ஏ.வி.கே. ஹரிச்சந்திரா, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
கொழும்பு-கண்டி A1 நெடுஞ்சாலையில் கேகாலை மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வறக்காபொல, பசுமை நிறைந்த சூழல், அழகிய மலைகள் மற்றும் இனிமையான காலநிலையால் சூழப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அல்கம எல்ல, துனுமல எல்ல மற்றும் தெலி எல்ல போன்ற தனித்துவமான இயற்கை இடங்களுக்கும் தாயகமாக உள்ளது.
கண்டி இராச்சியத்தின் ஆட்சியிலிருந்து உருவான வளமான வரலாறு மற்றும் மரபுகளில் ஆழமாக வேரூன்றிய வறக்காபொல, உள்;ர்வாசிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு நகர்ப்புற மேம்பாடு மற்றும் பன்முக கலாச்சாரம் இரண்டையும் பிரதிபலிக்கும் ஒரு போக்குவரத்து மையமாக தன்னை முன்வைக்கிறது.
“எங்கள் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான எங்களின் 60வது கிளையாக வறக்காபொல நகரை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பல்வேறு சேவைத் துறைகளால் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார நிலப்பரப்பையும், வர்த்தகத் துறையால் நெருக்கமாக பின்பற்றப்படும் ஒரு பொருளாதார நிலப்பரப்பையும் கொண்ட வறக்காபொல நகரம், அதன் பரபரப்பான சந்தைகள் மற்றும் துடிப்புமிக்க தெருக்களுக்கு பெயர் பெற்றது. ஒரு சிறிய பகுதியினரின் வாழ்வாதாரம் விவசாயம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளைச் சுற்றியே உள்ளது, தேங்காய், இறப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நெல் பயிர்செய்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இன்று, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தகம் மற்றும் ஏராளமான நவீன வசதிகளை வழங்குவதற்கான அதிக அணுகலுடன் மாவட்டத்தின் மைய இடமாக அங்கீகரிக்கப்பட்ட வறக்காகாபொல, ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் தொழிற்துறைகள் மற்றும் அமைதியான சிறு நகர வாழ்க்கை முறையை விரும்புவோரின்; ஆர்வத்தை பெற்று வரும் ஓர் நகரமாகும்.
வறக்காபொல கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக்கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் அதன் பில் செலுத்தும் வசதியான “ஸ்மார்ட் பே” வரை முழுமையான தயாரிப்பு வரிசையினை வழங்குகிறது, இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் இலக்குகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை பின்தொடர்வதில் இலட்சிய இளைஞர்களுக்கு உதவுகிறது.
அதன் முயற்சிகளில் ஒரு படி மேலே சென்று, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட அதன் “சியபதென் மிஹிகதட்ட” கூட்டு சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியின் கீழ் ஒஒஒ இல் ஒரு மரம் நடும் திட்டத்தை மேற்கொண்டது. டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும், பிள்ளைகளிடையே அத்தியாவசிய திறன்களை வளர்க்கவும் உதவும் தொலைநோக்கு பார்வையுடன் நிறுவனம் பாடசாலைக்கு பங்களித்தது. நாட்டில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகம், திறப்பு விழாவை சிறிது காலம் தாமதித்து நடத்த முடிவு செய்து, வறக்காபொல பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணத்தை ஒதுக்கியது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தால் விநியோகிப்பதற்காக குறித்த பொருட்கள் பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஞ்சீவவிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை
கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் 'A(lka))' என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது. 035 7687615 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 151, கண்டி வீதி, வறக்காபொல என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன்; மூலமோ வறக்காபொல கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும். 035 7687615 or visiting the premises at No: 151, Kandy Road , Warakapola. For more information on Siyapatha Finance PLC and its services, visit ..


