15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் சம்பத் வங்கிக் குழுமத்தினால் முழுமையாக உரிமை கொள்ளப்பட்ட ஒரு இணை நிறுவனமாகும். சியபத 2020 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு கிளைகளை மாத்தளையிலும், தம்புள்ளையிலும் அண்மையில் திறந்து வைத்துள்ளது.
இல 313ää 315 திருகோணமலை வீதிää மாத்தளை என்ற முகவரியிலும்ää இல. 705 அனுராதபுரம் வீதிää தம்புள்ளை என்ற முகவரியிலும் தமது 39வது மற்றும் 40வது கிளைகளை நாடு தழுவிய ரீதியிலான தமது வலயமைப்பில் சியபத பினான்ஸ் இணைத்துக் கொண்டுள்ளது. இவை முழுமையான வசதிகளையும் கொண்ட கிளைகளாக செயற்படுகின்றன. இவற்றில் லீசிங்ää வர்த்தகக் கடன்கள்ää தனிப்பட்ட கடன்கள்ää தங்க நகைக்கடன்ää பெக்டரிங்ää நிலையான வைப்பு சேவைகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் ஆகிய வசதிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
2020 டிசம்பர் மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களில் இடம்பெற்ற இந்த வைபவ ரீதியான நிகழ்வுகளில்ää சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். ஊழுஏஐனு-19 சுகாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டுää வரையறுக்கப்பட்ட அளவிலான ஊழியர்கள்ää அதிகாரிகள்ää ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாத்திரமே இதற்கென அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட திரு. செனவிரத்னää ‘எமது வாடிக்கையாளர்கள்ää எப்போதும் முன்னுரிமையாகக் கருதப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதி கருதியே நாம் செயற்பட வேண்டும் என்பது சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முக்கிய கோட்பாடாகும். அதிக சனத்தொகை கொண்ட மாவட்டங்களில் கிளைகளைத் திறந்து வைப்பதன் மூலம்ää பல்வேறு தேவைகளையும் கொண்ட மக்களுக்கு எமது சேவைகளையும்ää வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு புதிய இடங்களில் கிளைகளைத் திறந்து வைப்பதன் மூலம்ää எமது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேவைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவும்ää அதேவேளைää சியபத பினான்ஸ் குடும்பத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்’ என்று கூறினார்.
மக்கள் தமது வர்த்;தக இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் கருத்திற் கொண்டுää எமது நிறுவனம் தொடர்ந்தும் பல விஸ்தரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தனிப்பட்ட நபர்களின் நிதித் தேவைகளைப் ப10ர்த்தி செய்வதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முடியும்.
மேலதிக விபரங்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள புதிய கிளைகளின் தொலைபேசி இலக்கங்களான 10 94 0667 605 605 (மாத்தளை) அல்லது 1094 0667 605 635 (தம்புள்ளை) என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.siyapatha.lk என்ற இணைய தளத்தில் பிரவேசிக்கவும்.
“Siyapatha Finance – Trust Assured”