சியபத பைனான்ஸ் பிஎல்சி, தனது 34வது புதிய கிளையை, இல.341, பிரதான வீதி, புறக்கோட்டை என்னும் முகவரியில் திறந்து வைத்துள்ளது. முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, பிரதித் தலைவர் திரு. பிரசாந்த லால் டி அல்விஸ் மற்றும் பணிப்பாளரான திரு. ஜயந்த குணவர்தன ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் முகாமைத்துவப் பிரதிநிதிகள் உட்பட விசேட விருந்தினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்
நாட்டின் வேலைப்பளு மிகுந்த நகரமான புறக்கோட்டைக்கு வாரந் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நகரம் ஒரு பிரசித்தமான வர்த்தக மையமாகவும், பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் நன்கு அறியப்பட்ட ஒரு நிலையமாகவும், அத்துடன் சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்திற்கு பிரசித்தி பெற்ற முக்கிய தலமாகவும் அமைவதே இதற்குப் பிரதான காரணமாகும். மேலும், புறக்கோட்டை பன்முக கலாசார சமூகத்தைச் சார்ந்த மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு பிரதேசமுமாகும். ஆகவே, சியபத பைனான்ஸ் பிஎல்சி யின் முதன்மை நோக்கம், பெருமளவான இலங்கையர்களுக்கு இயலுமான வரையில் தமது சேவைகளை வழங்குவதாகும். இவ்வகையில் சியபத பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்றைத் திறப்பதற்கு இந்த நகரம் மிகப் பொருத்;தமான ஒரு இடமாகும்.
புறக்கோட்டையில் அமைந்துள்ள இந்தக் கிளை, குத்தகை, வாடகைக் கொள்வனவு, வியாபாரக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், சுழற்சிக் கடன்கள், ஈட்டுக் கடன்கள், வீட்டுக் கடன்கள், தங்கக் கடன்கள் மற்றும் பக்டரிங் மற்றும் நிலையான வைப்புக்களோடு தொடர்புபட்ட சேவைகளை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான சகல அம்சங்களையும் கொண்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு திறமைவாய்ந்த தொழில் வல்லுநர் குழுவொன்று புதிய கிளையின் சேவையாற்றி வருகின்றனர்.
இங்கு இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிட்ட சியபத பைனான்ஸ் பிஎல்சி யின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன 'சியபத பைனான்ஸின் சேவைகள் இயலுமான வரை அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை எப்போதும் கருத்திற் கொண்டுள்ளது. எமது நிறுவனத்தின் புதிய கிளை புறக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டமை நிறுவனத்திற்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றது. புறக்கோட்டை, பெருந்தொகையான, அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டிருப்பதும், வார நாட்கள் ப10ராகவும் பெருந்தொகையான மக்கள் இங்கு வருகை தருவதும், எமது வர்த்தகத்தை புதிய தொழில்நுட்பத்துடன் விரிவாக்கி இந்நகரத்தில் புதிய கிளையை திறந்து வைப்பது அத்தியாவசியமாகும். சியபத பைனான்ஸ் பிஎல்சி யின் வெற்றி, எமது வாடிக்கையாளர்கள் மீது ஆழமாக வேரூன்றியிருப்பதை நாம் உறுதியாக நம்புவதனால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு நாம் எப்போதும் உயர் தரத்திலான சேவையைப் பேணுவதை உறுதிப்படுத்துகின்றோம்" என்று கூறினார்.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப் பெரிய, முழுமையாக உரிமை கொள்ளப்பட்ட துணை நிறுவனம் என்ற வகையில் நாடு ப10ராகவும் கிளை வலையமைப்பைக் கொண்டு சியபத பைனான்ஸ் பிஎல்சி இலங்கையிலுள்ள மிக முக்கியமான நிதிக் கம்பனி ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம், அதன் தாய் கம்பனியோடு நெருக்கமான பங்குடைமையைக் கொண்டுள்ளது. சியபத பைனான்ஸ் பிஎல்சி, கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக பல எண்ணிக்கையான தொழில் முனைவு முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு தாராளமாக பங்களிப்புச் செய்துள்ளதோடு, நாடு முழுவதுமுள்ள பல்வேறுபட்டவர்களுக்கும் அவர்களின் நிதித் தேவைகளைப் ப10ர்த்தி செய்வதற்கு உதவி வழங்கி வருகிறது.
சியபத பைனான்ஸ் - நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது’
Picture Caption
Ms. Kanchana Gunawardena – Assistant Divisional Secretary, Colombo and Mr. M.T.M Iqbal – Deputy Mayor, Municipal Council Colombo officially open the Pettah Branch in the presence of Mr. Ananda Seneviratne – Managing Director, Mr. Prashantha Lal de Alwis – Deputy Chairman and Mr. PadmakumaraRajapakse – Branch Manager, Pettah of Siyapatha Finance PLC
Mr. Ananda Seneviratne, Managing Director, Siyapatha Finance PLC, lighting the traditional oil lamp.