முன்னணி நிதி நிறுவனம் ஒன்றான சியபத பினான்ஸ் பிஎல்சி யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கிளையைத் திறந்து வைப்பதன் மூலம் தனது வலையமைப்பின் விரிவாக்கத்தை மேலும் விருத்தி செய்கிறது. இந்த நிகழ்வு 2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதி புதிய கிளை அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதிää இல. 388 என்ற முகவரியில் இடம்பெற்றது. சியபத பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன திரு. சுமித் குமாரதுங்க, திரு. ஜயநாத் குணவர்தன (சியபத பினான்ஸின் பணிப்பாளர் சபை உறுப்பினர்) சிறப்பு விருந்தினர்கள் அமைப்பின் முகாமைத்துவ உறுப்பினாகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கிளையுடன் சியபத பினான்ஸின் நாடு தழுவிய கிளை வலையமைப்பு 35 ஆக உயர்வடைந்துள்ளது.
சியபத பினான்ஸ் யாழ்ப்பாணத்தில் கிளை ஒன்றைத் திறந்து வைத்துள்ளமை. நிறுவனத்தின் கிளை வலையமைப்பு விருத்தியில் ஒரு முக்கிய அம்சமாகும். இலங்கையின் வடக்கு மாகாணத் தலைநகராகத் திகழும் யாழ்ப்பாணம் கூடுதல் சனத்தொகையைக் கொண்டுள்ளதோடு இது சகல அம்சங்களிலும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உள்நாட்டு சிவில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தன்னை மீளக் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்த வேளையில் சியபத பினான்ஸின் கிளை திறந்து வைக்கப்பட்டமை ஒரு சரியான தருணமாகவும் காலத்திற்கேற்ற தீர்மானமாகவும் அமைந்திருக்கிறது. இதன் காரணம் நிறுவனத்தின் குறிக்கோளும்ää இலங்கையர்களுக்கு அதிகபட்ச சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதுமாகும். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சியபத பினான்ஸ் கிளையானது வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு முழுமையான கிளையாக செயற்படுவதோடு இது நிலையான வைப்பு சேமிப்பு லீஸிங் வாடகைக் கொள்வனவு வர்த்தகக் கடன்கள் தனிப்பட்ட கடன்கள் வீட்டுக் கடன் தங்க நகை அடகுக் கடன் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சியபத பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. செனவிரத்ன கருத்து வெளியிடுகையில் ‘சியபத பினான்ஸின் 35வது கிளை திறப்பு விழா நிகழ்வானது எமது கிளை வலையமைப்பு விருத்தியில் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தக் கிளை திறந்து வைக்கப்படுவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் எமது நடவடிக்கைகள் அதிகரித்துச் செயற்படுவதற்கு காரணமாக அமைகிறது. எமது வாசலுக்கு வரும் அனைவருக்கும் சிறந்ததொரு வாழ்க்கை நிலையை உருவாக்கிக் கொடுப்பதை சியபத பினான்ஸ் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாண மக்களின் அயராத உழைப்பை நாம் பெரிதும் மதிப்பதோடு அவர்களின் வாழ்க்கையை சூழ்நிலைகளையும் தாண்டி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல நாம் எப்போதும் துணையாக அமைந்திருப்போம். நகர மத்தியில் ஒரு கிளையை ஆரம்பித்து வைப்பதன் மூலம் நாம் அவர்களுக்கு சகல வகையிலும் உதவி புரிந்து இந்த நகரைக் கட்டியெழுப்புவதற்கும் இந்த மாகாணத்தின் அபிவிருத்தியை மேலும் துரிதப்படுத்தவும்ää நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். எனினும் சியபத பினான்ஸ் ஆனது வாடிக்கையாளர்களை நோக்கிய ஒரு நிறுவனமாகும். எமது வெற்றிக்குக் காரணம் எமது வாடிக்கையாளர்களே. எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக எம்மால் முடிந்த அதிகளவு முயற்சிகளை மேற்கொள்வோம். யாழ்ப்பாணத்திலுள்ள புதிய கிளைக்கு வருகைதரும் அனைவருக்கும் சேவை வழங்குவதற்காக நன்கு தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஊழியர் குழுவொன்றை நாம் தெரிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.
சியபத பினான்ஸ் நிறுவனம் கடந்த 14 வருடங்களாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சிக்கு நாடு தழுவிய ரீதியில் மிகச் சிறப்பான முறையில் பங்களிப்புச் செய்து உதவியுள்ளது.
சியபத பைனான்ஸ் - நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது’