முன்னிலை செய்தி

சியபத பினான்ஸ் தனது சேவைத் தரங்களையும், நிலைத் தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது

Siyapatha Finance reiterates Service Excellence and Stability

தொழிற்துறையில் பல்லாண்டு கால அனுபவங்களைக் கொண்டுள்ள சியபத பினான்ஸ், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கியினால் 100% உரிமம் கொள்ளப்பட்ட ஒரு நிதி நிறுவனமாகும். சம்பத் வங்கி பிஎல்சி யின் முழுமையான ஒரு இணை நிறுவனம் என்ற வகையில் இது, தொடர்ந்தும் பல வெற்றிகளை ஈட்டி வருகிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர் குழுவொன்றினால் உருவாக்கப்பட்ட பணிப்பாளர் சபை மற்றும் அதன் தலைவரான திரு. சுமித் குமாரதுங்கவின் வழிநடத்தலின் கீழ் சம்பத் வங்கியானது, தொடர்ச்சியாக தமது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொடுப்பதன் மூலம் நிறுவனம் எதிர்நோக்கும் சகல சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, முன்னோக்கி வருகிறது.

மக்களின் ஆதரவு, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை, ஒருமைப்பாடு, சேவைத்தரம் ஆகிய விசேட குணாதிசயங்களின் மூலம், சியபத பினான்ஸ், முன்னணி தொழில்நுட்பம் கொண்ட ஒரு நிதி நிறுவனமாகவும் சிறந்த சேவையை ஆற்றி வருகிறது. தமது செயற்பாட்டுக் கூற்றைப் பின்பற்றும் வகையில் தொடர்ச்சியாக குழும ஆளுமையைப் பேணி வரும் அதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, சியபத பினான்ஸ் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறது.

தமது நிதிச் சேவைகள் மூலம் எந்தவொரு வாடிக்கையாளரின் தேவைக்கும் ஏற்ற வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, பல்வேறு உற்பத்திகளை அதாவது, வாகன லீசிங், தங்க நகைக் கடன்கள், வர்த்தகக் கடன்கள், தனிப்பட்ட கடன், நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்கு, பெக்டரிங் ஆகிய பல்வேறு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில், இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள மூலதனத் தேவைப்பாடான ரூபா 2.5 பில்லியனையும் தாண்டி, சுமார் ரூபா 4 பில்லியன் வரையிலான சக்தி வாய்ந்த மூலதன அடிப்படையைக் கொண்டு செயற்பட்டு வரும் நிறுவனம், தொடர்ந்து தமது சேவைகளை முன்னெடுத்து, சகல வாடிக்கையாளர் பிரிவுகளையும் இதில் சிறிய மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கி அனைவருக்கும் சிறந்த நிதிச் சேவைகைளப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, கிராமிய மக்களிடையே சேமிப்பு பழக்கங்களை உருவாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த வெற்றிகளை அடைந்து கொள்ளும் வகையில், நிறுவனத்தின் கிளை வலையமைப்பை விஸ்தரித்தமை ஒரு முக்கிய காரணமாகும். நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் 40 கிளைகளைக் கொண்டு சக்தி வாய்ந்த ஒரு வலையமைப்பாக நிறுவனம் இயங்கி வருகின்றது. நாட்டில் நிலவி வரும் தொற்று நோய் அபாய காலப் பகுதியிலும் கூட, ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தாண்டி, சியபத பினான்ஸ் நிறுவனம், கொஹ{வல, நிட்டம்புவ, மாலபே, மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களில் புதிதாக ஐந்து கிளைகளையும் நிறுவியுள்ளது. இதற்கு மேலதிகமாக, கட்டுகஸ்தோட்டை, மாத்தறை, அம்பாறை, நுவரெலியா, நீர்கொழும்பு, குருநாகல், பேலியகொடை, நுகேகொடை, சாய்ந்தமருது, அனுராபுரம், இரத்தினபுரி, கேகாலை, குளியாப்பிட்டி, வவுனியா, குருநாகல் மெட்ரோ, கண்டி, கல்முனை, அவிசாவளை, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை, வெள்ளவத்தை, காலி, பாணந்துறை, கிரிபத்கொட, மஹரகம, வத்தளை, ஹட்டன். பிலியந்தல, சிலாபம், மொறட்டுவ, புறக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் என்பன ஏனைய கிளைகளாகும். இவற்றின் மூலம் சியபத பினான்ஸ் நாடு தழுவிய ரீதியில் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்காக தமது விஸ்தரிப்பை எந்தளவு மேற்கொண்டுள்ளது என்பது நன்கு தெளிவாகிறது.

தொற்று நோய் பரவி வரும் இந்தக் காலப்பகுதியிலும், கிளைகளைத் திறந்து வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொடுக்க இருக்கும் எண்ணம், வாடிக்கையாளர்கள் மீது நிறுவனம் காட்டும் ஆதரவு, ஆர்வம் நன்கு வெளிப்படுகிறது. இதுவரை காலம் காணப்படாத இந்த Covid 19 தொற்று நோய் காலப்பகுதியில் தமது வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் கடுமையாக உழைத்து செயற்பட்டது. 2020 ஆம் ஆண்டில் எந்தவித ஊழியர் பணி நீக்கமோ அல்லது சம்பளக் குறைபாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து கடின உழைப்புடன் செயற்பட்டு வந்த ஊழியர்களுக்கு சியபத பினான்ஸ் சிறந்த வெகுமதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது. தற்போதைய வர்த்தக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் காணப்படும் தளம்பல் நிலையையும் தாண்டி சியபத பினான்ஸ் குழு கடுமையான சவால்களை வெற்றிகரமாக முறியடித்து நிறுவனத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள மிகச் சிறந்த சக்தியுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டு வருகின்றது.

சியபத பினான்ஸ் தொடர்ந்து தமது செயற்திறனை அதிகரித்து வரும் அதேவேளை, வாடிக்கையாளர்களினதும், ஊழியர்களினதும் சுகாதாரம் பற்றியும் சிறந்த கவனம் செலுத்தி வந்தது. தொடர்ச்சியாக தமது கிளைகளை மெய்நிகர் மற்றும் நேரடி முறைகளின் மூலம் செயற்படுத்தி, வாடிக்கையாளர்களின் வசதிகளை உறுதிப்படுத்தியது. தொற்று நோய் காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்த்து முகம் கொடுப்பதற்காக, முதலாவது மற்றும் இரண்டாவது முறை ஏற்பட்ட தொற்று நோய் காலப்பகுதிகளில் கடன் தவணையுரிமைத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் செயற்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்ட சியபத பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, ‘Covid 19 காரணமாக ஏற்பட்ட இடரை சியபத பினான்ஸ் குழுமம் நன்கு அறிந்து கொண்டது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உதவியைப் பெற்றுக்கொடுப்பது சியபத பினான்ஸ் குடும்பத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக, ஆர்வலர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு, சிறந்த உபாய முறையொன்றையும் நிறுவனம் கையாண்டது. அதன் மூலம் நாம் தொடர்ந்து அனைவரும் இணைந்து செயற்பட்டு எமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்தது. நாடு தழுவிய ரீதியில் வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்ளவும் எம்மால் முடிந்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் எனது குழு மற்றும் அவர்களின் ஆர்வம், ஈடுபாடு என்பன தொடர்பாகவும், அவர்களின் மனோநிலை தொடர்பாகவும் எனக்கு மிகச் சிறந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் மீதான சிறந்த செயற்பாடுகளுக்கும் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மைக்கும் அது இன்றியமையாத ஒன்றாகும்’ என்று கூறினார்.

2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து பாதகமான சூழ்நிலைகளையும் தாண்டி, சியபத பினான்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்புடனும், நிலையான எண்ணத்துடனும் தமது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து காத்திருக்கின்றது.

சியபத பைனான்ஸ் - நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது’