உங்களது அன்றாட நிதி தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய விதத்தில் எமது தங்கக் கடன் சேவைகள் ஊடாக சிறந்த நிதித் தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். உங்களது தங்க நகைகளுக்கு ஆகக் கூடிய பெறுமதியினை வழங்குதல், உங்களது தங்க ஆபரணங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் துரித சேவைகளை வழங்குவதன் ஊடாக உங்களது தனிப்பட்ட தன்மை பாதுகாக்கப்படும் விதத்தில் இந்த சிறப்பான கடன் சேவைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
எந்தவொரு அவசர சந்தர்ப்பத்திலும் விரைவாக நிதி தேவைப்படுகின்றபோது சில நிமிடங்களில் உங்களது தனிப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்து உடனடியாக கடன் முற்பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகள் சியபத தங்கக் கடன் அடகு சேவை ஊடாக வழங்கப்படுகின்றது.
ஆகக் குறைந்த வட்டி வீதத்துடனும், தமது விருப்பத்திற்கேற்ற விதத்திலும் சிறப்பான வினைத்திறன்மிக்க கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் ஊடாக வழங்கப்படுகின்ற இந்த சேவைகள் ஊடாக, தமது தங்க நகைகளை அடகு வைத்து தமது உடனடி வியாபார நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்ற முயற்சியாளர்களுக்கென, இந்த வசதியானது விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் வரிசையில் காத்திருக்காது தமது பெறுமதியான காலத்தை மீதப்படுத்தி இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.