முன்னிலை செய்தி

சியபத நிதி "விவசாய குத்தகை" மூலம் விவசாயத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

Siyapatha Finance empowers Agriculture sector with “Agri Lease”

சியபத பினான்ஸ் பி.எல்.சி சம்பத் வங்கி யினால் முழுமையாக உரிமம் கொள்ளப்பட்ட ஒரு இணை நிறுவனமாகும். அது சிறிய நடுத்தர மற்றும் பாரிய அளவிலான விவசாயிகளுக்காகவும் விவசாயத்தை மூலோபாயமாகக் கொண்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்காகவும் ஒரு விசேட லீசிங் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளோர் புதிய இயந்திர சாதனங்களைக் கொள்வனவு செய்யவும். ஏற்கனவே பாவனையிலுள்ள இயந்திர சாதனங்களை தரம் உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதே இந்தப் புதிய லீசிங் பொதியின் குறிக்கோளாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் விவசாயத்துறை வழங்கி வரும் பங்களிப்பைக் கருத்திற் கொண்ட சியபத பினான்ஸ் நிறுவனம் விவசாயிகளும் விவசாயத்துறையில் தொழில் முயற்சி மேற்கொள்வோரும் பிரச்சினைகள் இன்றி லீசிங் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய லீசிங் பொதியின் ஊடாக குறைந்தளவு தவணைக் கொடுப்பனவுகள் நெகிழ்வான மீளச் செலுத்தும் வசதிகள் மாதாந்தம் அல்லது போக அடிப்படையில் மீளச் செலுத்தும் வசதி என்பனவற்றுடன் குறைந்த ஆவணங்களுடனும் மிகத் துரிதமாக எந்தவிதமான சிக்கல்களும் இன்றி அங்கீகாரம் பெறவும் முடியும். விவசாயிகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் குறைவான கட்டணத் தொகை மற்றும் நெகிழ்வான கட்டண முறை என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இறுக்கமான நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இல்லாமையினால் விவசாயிகள் தங்களது கொடுப்பனவுகளை நெகிழ்வான முறையில் மேற்கொண்டு தமக்கு தேவையான இயந்திர உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒரு ஊக்குவிப்பு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. துல்லியமாகச் செயற்பட்டு மிகத் துரிதமாக அங்கீகாரம் வழங்கும் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளமையினால் செயற்திறன் அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு விசேடமாக விவசாயிகள் இலகுவாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிடுகையில் ‘எமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத் துறையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. அதேவேளை பெருந்தொகையான விவசாயிகள் தமது இயந்திர உபகரணங்களை புதுப்பிக்கவோ அல்லது புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவோ நிதிசார் நெருக்கடிகள் காரணமாக முன்வரத் தயங்குகின்றனர். இந்தத் தேவையை அடையாளம் கண்டுள்ள நாம் அவர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் விசேட “யுபசi டுநயளந” பொதி ஒன்றை அறிமுகப்படுத்தி இந்த நடவடிக்கையை இலகுபடுத்தியுள்ளோம். இலங்கை வாழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான பங்களிப்பைப் பெற்றுக்கொ பல்வேறு அனுகூலங்களுடன் உங்களை வந்தடையும் சியபத பினான்ஸின் புதிய திட்டம் அனைவருக்கும் வசதிகளையும் சிக்கல்கள் அற்ற செயற்பாடுகளையும் பெற்றுக்கொடுத்து விவசாயத் துறையில் மிகத் துரிதமாக ஈடுபட்டுள்ளோருக்குத் தேவையான இயந்திர உபகரணங்களைக் கொள்வனவு செய்ய மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும்

இல்லை.படம்:டுப்பது எமது நோக்கமாக அமைந்துள்ளது’ என்று கூறினார்.

சியபத பைனான்ஸ் - நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது’