முன்னிலை செய்தி

சியபத பினான்ஸ் பிஎல்சி நிவ்பிரிஜ் போய்ஸ் ஹோம் நிலையத்திற்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

Siyapatha Finance PLC donate IT equipment to the Newbridge Boys’ Home

சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் வேவல்தெனியவில் அமைந்துள்ள நிவ்பிரிஜ் போய்ஸ் ஹோம் நிலையத்திற்கு கணனிகள் உட்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள இளம் சந்ததியினரின் கல்வி அறிவு வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் நிறுவனத்தின் குழும சமூகப் பொறுப்பு செயற்பாடுகளில் ஒன்றாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேவல்தெனியவில் உள்ள நிவ்பிரிஜ் போய்ஸ் ஹோம் நிலையம் தற்போது 6 - 18 வயதுக்கு உட்பட்ட 21 பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கல்வி முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் பெரும்பாலான கல்வித் திட்டங்கள் ஒன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால்ää இந்த இல்லத்தில் உள்ள பிள்ளைகள் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவ மாணவிகள் ஒன்லைன் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வரும் இவ் வேளையில் இதற்கான தேவை நாடு தழுவிய ரீதியிலும் ஏற்பட்டுள்ளது.

நிவ்பிரிஜ் போய்ஸ் ஹோம் நிலையத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் தேவையான கணனிகள் மற்றும் ஏனைய தகவல் தொழில்நுட்ப இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம்ää அவர்களின் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகை செய்து கொடுக்க சியபத பினான்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்கால சந்ததியினரின் கல்வி தேவைப்பாடுகளுக்கு சியபத பினான்ஸ் தமது பங்களிப்பைத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுத்து வருகிறது. சமூகத்தில் காணப்படும் வளப் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வாறான குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதில் நிறுவனம் ஒரு உதாரண புருஷராகச் செயற்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் புலப்படுத்தியுள்ளது.

இந்த சமூக சேவை நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன ‘எமது நாட்டின் சிறுவர்களுக்கு தற்போது பரவி வரும் தொற்று நோய் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது நண்பர்கள் தமக்கு அருகில் இல்லாமல் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவர்களுக்கு புதியää வித்தியாசமான விடயமாக உள்ளது. மேலும்ää ஒன்லைன் திட்டத்திற்கு மாற்றப்பட்டமையினால் அவர்கள் பல்வேறு வளப் பற்றாக்குறைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் அவர்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நாம் நம்புகிறோம். எனவேää நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளோம். இவர்கள் எமது நாட்டின் எதிர்காலமாகக் கருதப்பட வேண்டியவர்களே’ என்று குறிப்பிட்டார்.

சியபத பைனான்ஸ் - நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது’